Tuesday, December 9, 2014

இன்றுடன் ஒன்று

இன்றுடன் ஒன்று


முதலாம் ஆண்டில் காலடி எடுத்து  வைக்கிறது நமது தமிழ் அவுஸ்திரேலியன்.தமிழ் அவுஸ்திரேலியன் குழு மகவின் முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும்ஆனந்தத்தில் இருக்கின்றது.
எழுந்த சவால்களுக்கு  நடுவிலும் தரத்தையோ, பக்கங்களையோ, நோக்கத்தையோ சமரசம் செய்யாது பன்னிரெண்டு இதழ்களை எமது குழு வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இதழ் குறித்து வாசகர்  அளித்த விமர்சனங்கள் யாவும்  மிகுந்த ஆரோக்கியமானவை என்பது மனதுக்கு மகிழ்ச்சியையும் , செயல்படத் தெம்பையும் தருகிறது. தவறுகள் நேர்ந்த போது சுட்டிக்காட்டிய தாயுள்ளம் கொண்ட ஆதரவாளர்கள் அனேகர்.
இந்தியாவிற்கு அங்குள்ள பிரபல பத்திரிகை அலுவலகங்களுக்கு பிரதிகள் அனுப்பிய போது, எல்லோரும் பாராட்டினர்.இந்து தமிழ் பிரசுரம், இந்தியா டுடே, தினமலர், தின இதழ் , கலைமகள் ஆசிரியர்களும், ஆசிரியர் குழுவினரும்   நமது பத்திரிகையின் தரம், உள்ளடக்கம், பக்க வடிவமைப்பு  குறித்து பாராட்டினர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் தினமலர்  நாளிதழின் ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி, நமது இதழின் தரம், அமைப்பு, உள்ளடக்கம் குறித்து மனம் விட்டுப் பாராட்டினார்.
பர்மா தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்  “ இந்திய பத்திரிகைக்கு இணையாக உள்ளது” என்று பாராட்டியதாக திரு மாறன் நந்தன் தெரிவித்தார்.
மொரிஷீயசு தமிழ் மாநாட்டில் ஐம்பது பிரதிகள் வைத்த ஐந்து நிமிடங்களில் காணாமல் போனதுடன், தொடர்ந்து பிரதிகளைக் கேட்ட வண்ணம் இருந்தனர் , மாநாட்டில் பங்கேற்றவர்கள்,”இலவசமாகவா இத்தனை பக்கங்கள் கொண்ட இதழை வினியோகிக்கிறீர்கள் ?” என்று புருவம் உயர்த்தினர்.

இத்தனையும் எம்மைப் பெருமைப்பட வைத்தாலும் இதனைத் தொடந்து நடத்தும் நோக்கில் , இதன் பக்கஅளவையும் அமைப்பையும் மாற்ற வேண்டிய  கட்டாயத்தில்  நாம் இருக்கிறோம். வாசகர்கள் , வாடிக்கையாளர், தமிழ் ஆர்வலர் அனைவருக்கும், இதுவரை  நீங்கள் தந்த அமோக ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் வளரும் தமிழ் அவுஸ்திரேலியன் தவழும் பருவத்திலும் அதே ஆதரவு வேண்டி நிற்கிறோம். தமிழ் அவுஸ்திரேலியன் உருவம் மாறி வந்தாலும் உள்ளம் மாறவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிப் பணிகிறோம். 

1 comment:

  1. Casino 1xbet Bonus Code - Air Jordan 3
    2Xbet Bonus Code · Deposit: 100% air jordan 18 retro men outlet bonus up to $200 air jordan 18 retro racer blue sports · air jordan 18 retro men red online free shipping Sports: Football, Basketball, Basketball air jordan 18 retro red to you · Minimum Deposit: make air jordan 18 retro men blue $10 · Players: 1,

    ReplyDelete