Google+ Followers

Sunday, November 10, 2013

இணையில்லாத் திருக்கோயில் இராமேஸ்வரம்!

நான் சென்றத் திருத்தலங்கள்


இணையில்லாத் திருக்கோயில் இராமேஸ்வரம்!

                இந்து மதத்தின் இரு கண்கள் சைவ வைணவ வழிபாடுகள். இந்த இரண்டையும் இணைத்து நிற்கும் திருக்கோயில்கள் ஒரு சிலவே. அவற்றுள் பிரபலமானவை எனப்படுவது மேலும் குறைவானதே.
இலங்கை இந்திய உறவுப்பாலம்
                இந்து மதத்தின் இதிகாசக் கருவூலங்களில் இராமாயண காவியத்துடன் தொடர்புடையதும்ää சைவ வைணவ இணைப்பை பறைசாற்றி நிற்பதும்ää இலங்கை இந்திய உறவுப் பாலத்தின் முக்கிய மையமாக இருப்பதுமான திருத்தலம்தான் இராமேஸ்வரம்.
                “அணை அலை சூழ் கடல் அன்(று) அடைத்து வழி செய்தவன்
                பண இலங்கும் முடி பத்(து) இறுத்த பழி போக்கிய
                இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேஸ்வரம்
                துனையிலிää தூய மறைப்பாதம் ஏத்தத் துயர் நீங்குமே
                இந்தியத் திருமண்ணின் நான்கு திசைகளிலும் நான்கு திருத்தலங்கள் வரலாற்று சிறப்பும் புனித சக்தியும் உள்ளதாக வழிபாட்டுப் பெருமை பெற்றுள்ளன. இகபர சுகங்களை வாரி வழங்கும் இத்திருத்தலங்கள் வடக்கில் பத்ரிநாத்ää கிழக்கே பூரிää மேற்கே துவாரகைää தெற்கே ராமேஸ்வரம் என இயம்பப்படுகின்றன. இவற்றுள் ராமேஸ்வரம் மட்டுமே சிவத்தலமாகும். ஏனையவை வைணவத் தலங்கள்.
ஜோதிர்லிங்கம்
                தவிர ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டினுள் ஒன்று இராமலிங்கம். இதனை அமையப் பெற்றுள்ள இராமேஸ்வரம் ஜோதிர்லிங்கத்தலமாகும்.
                புராண கூற்றின்படி இராவண வதத்தை வெற்றிகரமாக முடித்த ஸ்ரீராமன் தனக்கேற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை நீக்கிக் கொள்வதற்காக தன் மனைவிää தம்பி இலக்குவன் சகிதமாக அமர்ந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டான் என்பதாக அறியக் கிடக்கிறது.
                தென்னாட்டில் குறுகிய கடல் பகுதியால் இராமேஸ்வரம் ஏனைய பரப்பிலிருந்து பிரிக்கப்பட்டு கிடக்கிறது. தீவாக உள்ள இந்த இடத்தில் வானளாவிய இராஜ கோபுரங்களும்ää உயர்ந்த மதில்களும்ää பிரமாண்டமான பிரகாரங்களையும்ää இருபத்திரண்டு புனித தீர்த்தங்களையும் கொண்டுள்ளது ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோயில்.
இராமர் வழிபட்டார்
                இராமனுக்கே நாதனாக நின்றருளியதால் இராமநாத சுவாமிகள் என்ற பெயர் மூலவருக்கு வழங்கப்படுகிறது. உடனுறை அம்மையின் திருநாமம் மலையினில் பிறந்தவள் என்ற கருத்துடன் கூடிய ஸ்ரீ பர்வத வர்த்தினி. இக்கோயில் பற்றிய இன்னொரு சுவையான சம்பவம் உள்ளது. லிங்கத்தை பிரதிட்டை செய்ய முற்பட்ட இராமர் கைலாயத்திலிருக்கும் இலிங்கத்தைக் கொண்டு வரும்படி இராம தூதனான அநுமனுக்குப் பணித்தார். நெடுந் தொலைவிலிருந்த அநுமன் இலிங்கத்துடன் வருவதற்குள் நல்ல நேரம் தாண்டி விடும் என்பதால் சீதை மணலால் செய்த இலிங்கத்தை இராமர்ää பிரதிட்டை செய்ததே ஸ்ரீராமலிங்கம். அநுமன் காலம் தாழ்த்தி கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ராமலிங்கத்தின் அருகில் வேறாக பிரதிட்டை செய்து இராமன் வணங்கினான். மேலும் விஸ்வலிங்கத்துக்கே பூஜை முதலியன நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டான் இராமன். இச்சன்னதி ஸ்ரீ இராம தூதர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. அவருடன் விசாலாட்சிஅ ம்மையும் உறைகிறாள்.
                ஸ்ரீபர்வத வர்த்தினி சன்னதி சுவாமியின் வலது புறம் அமைந்துள்ளது. இதற்கு வடமேற்கு மூலையில் ஆகாயத்தை நோக்கும் திருமுக அமைப்போடு பள்ளி கொண்ட பெருமாள் காட்சி தருகிறார்.
நந்தி
                இத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான் சிறப்பானவர். மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளார். இது தவிர கோயிலில் புகழ்பெற்ற வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் அதேயளவான இராமலிங்க பிரதிட்டை உருவம் காணப்படுகிறது. ஸ்ரீ ராமனருகே அமர்ந்த சீதாதேவிää உடன் இலக்குமணன் அவர்களுடன் இரு கையிலும் லிங்கம் ஏந்திய அநுமன் நின்று உள்ள அக்காட்சி மனதை ஈர்க்கிறது.
சேது தீர்த்தம்
                சேது தீர்த்தமாடல் இத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பாகும். வங்காள விரிகுடாவும்ää இந்துமா கடலும் இணையும் இடத்தில் தனுஷ்கோடியில் தீர்த்தமாடுவதே கேது தீர்த்தமாடுவதாகும். மூர்த்திää தலம்ää தீர்த்தம் மூன்றினாலும் சிறப்புடைத்தது இத்தலம். இங்கு தரிசனம்ää விஜயம்ää தீர்த்தமாடல் மூன்றும் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்விசேட தீர்த்தம் தவிர திருக்கோவிலினுள் இருபத்திரண்டு தீர்த்தங்களும்ää அதன் வெளியே முப்பத்தேழு தீர்த்தங்களும் இங்குள்ளன. கோயிலுக்கு எதிரேயுள்ள சமுத்திர ஸ்நான கட்டம் அக்னி தீர்த்தமென புகழ் பெற்றது. கோயிலிலிருந்து வடக்கே சுமார் மூன்று மைல் தூரத்தில் கந்தமாதன பர்வதம் என்ற மண்டபம் உள்ளது. இங்கு ஸ்ரீ இராமனின் பாதக்கமலங்கள் பதிந்துள்ளன.
                விபீஷணர் சரணாகதி அடைந்ததும்ää பட்டாபிஷேகம் நடத்தப்பட்டதுமான தலம் ஸ்ரீ கோதண்ட இராமர் கோயில் இராமேஸ்வரத்திலிருந்து 7 மைல் தூரத்தில் உள்ளது.
                இந்துக்களுக்கு காசியில் தொடங்கப்படும் தல யாத்திரை இராமேஸ்வரத்தில் தான் முடிவடைகிறது. அதுவும் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின்னரே நிறைவுறுகிறது.
                “சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
                அவனோ அல்லன்ää என்மெய் வரமெலாம் சுடுகின்றான்
                தவனோ என்னில் செய்து முடிக்கும் தானல்லன்
                இவனையோ தான் வேதமுதல் காரணன்

என்று கம்பராமாயணம் புகழும் இராமன் பூஜித்த பர்வதவர்த்தினி உடனுறை இராமலிங்க சுவாமிகளின் பாதார விந்தங்களே சரணம