Sunday, October 27, 2013

மொழியைப் பேணுவோம்


மொழியைப் பேணுவோம்

மொழி நமது கலாச்சாரத்தின் அங்கமாகும். மொழிப் பிரச்சனைதான் இனப் பிரச்சனையின் கருப்பொருளானது என்பது இலங்கை சந்தித்திருக்கும் நிதர்சனம்.

இன்னொரு மொழியைப் படிக்க மறுத்தது எங்கள் தலைமுறை. அதற்கான காரணம் இருந்தது. ஆனால் எமது சந்ததியினரது வாழ்க்கை இன்று உலக மொழிகளில் இயங்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். நமது மொழி சூழ்நிலைக் கைதியானது தவிர்க்க முடியாத துயரமே.

ஆனால்வெளிநாடுகளில்  மொழியை தமிழ் பள்ளிக் கூடங்கள் மட்டும் பேணி விடும் என்று அலட்சியமாக இருந்தது நமது தவறு.தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் படிக்காத பிள்ளைகளின் பேச்சுத்தமிழும் , தமிழ் வாசிப்பும் தொடர்ச்சியாக மொழிப் பேணலின் ஓர் அம்சமாக இருப்பது என் வீட்டிலேயே உதாரணமாக வளர்ந்துள்ளது.வார இதழ்களைப் படிக்கவும், பாடல்களின் பொருள் உணரவும்,சரளமாக கடின வார்த்தைகளின் பயன் பாட்டுடன் பேசவும், கொழும்பில் உள்ள என் முதிய உறவினர்களுடன் தொலைபேசியில் பேசவும்  தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடம் போகாத என் மகள் உதாரணமாக இருக்கிறாள்.

அதே சமயம் எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் வாங்கிய பரிசுக் கோப்பைகளை வைக்க இடம் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்கள் ஒரு குறித்த காலத்தின் பின் தமிழ்  மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களுக்குப் போவதைத் தவிர்த்தவர்கள்.அதன் பிறகு மொழியின் அடிப்படைகளைக்  கூட மறந்து போனவர்கள்.பேச்சுத்தமிழ் சிங்கள நண்பர்கள் தமிழ் பேசுவது போல இருக்கும்.வீட்டில் இருக்கும் பாட்டன் பாட்டியினருடன் இந்த மொழி மறதியினால் பேசாமலே இருப்பவர்கள்.

இதை தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களின் பிழை என்று நிச்சயமாகக் கூற மாட்டேன்.மொழிப் பேணலின் அடிப்படைகளை பெற்றோர் மறந்து போன காரணமே இந்த சரிவின் பெரும் காரணமாக எனக்குப் படுகிறது.ஆஸ்த்திரேலிய அரசு தாய் மொழி பராமரிப்புக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடத்தினால் மட்டுமே தமிழை தொடர்ந்து பராமரிக்க உதவ முடியாதது. தாய் மொழி என்பது தாயின் வாய் மொழியால் முதலில் கற்ற மொழி என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment