Sunday, October 27, 2013




என்னைப் பற்றிய சுயபுராணம்


நான்  இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் ஆய்வுப்பட்டம் பெற்று சுமார் முப்பது ஆண்டு காலத்துக்கு மேலாக பத்திரிகை , வானொலி, தொலைகாட்சி துறைகளில் ஈடு பட்டு வந்திருக்கிறேன்.

பத்திரிகையாளராக தினமலர், சென்னை வானொலி, தொலைகாட்சியிலும் இலங்கை வீர்கேசரியில் வார இதழ் ஆசிரியராகவும் பணி புரிந்த அனுபவம் உள்ளது.

பத்துக்கும் மேலான நூல்களை எழுதி இருக்கிறேன்.அவற்றுள் எனது மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருது கிடைத்து உள்ளது.

பதிப்புத் துறையில் கணினியை பயன் படுத்துவது தொடர்பாக யுனெஸ்கோ நடத்திய சர்வதேச பயிற்சிப் பட்டறையில் சிறப்பு பட்டம்பெற்றுள்ளேன்.  
கணினித் துறையில் மைக்ரோசொஃப்ட் மென்பொருள் திறமையாளர் மற்றும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்று பணியாற்றி உள்ளேன்.


தமிழக மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இதழியல் கற்பித்தேன்.  தற்போது மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்டம். கற்பிக்கிறேன்.
சிட்னியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறேன்.கடந்த மூன்றாண்டுகளுக்குள் எனது சட்ட பணிக்காக மூன்று விருதுகள் கிட்டியுள்ளன.
Woman of the West  Commended Award 2012 University of Western Sydney
Highly commended Award 2011  – Women Lawyers Association
Nominee 2009 Justice Medal

சிட்னி முருகனின் மீது எழுதிய பாடல்கள் இசைத் தட்டாக வெளிவந்துள்ளன.

ஆஸ்த்திரேலிய தமிழ் மாத இதழ் ‘தமிழ் அவுஸ்திரேலியனின்’ ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறேன்.


மேலும் தெரிந்து கொள்ள www.successlawyers.com.au

No comments:

Post a Comment