Wednesday, December 25, 2013

ஊருக்கு அனுப்பி வைக்க நினைக்கும் கணவனிடம் கவனம்

ஊருக்கு அனுப்பி வைக்க நினைக்கும் கணவனிடம் கவனம்.

அடிக்கடி கோயிலுக்குப் போகும் நல்ல பழக்கம் எனக்கு.அப்போது தான் மீரா எனக்கு அறிமுகமானாள்.சில சமயம் கணவனுடன், பல சமயம் தனித்து வருவாள். அவள் கணவன் பாலா  ஒரு ஞானப் பழம். நெற்றியில் விபூதி குங்கும சங்கமம் இல்லாமல் காண முடியாது.

கொஞ்சக் காலமாக காணவில்லை. போன வாரம் முருகன்  கோவிலில் அழுது கொண்டிருந்தாள். அப்பெண் மீரா தானா என்று உறுதி செய்த பின் அணுகினேன். பலத்த அழுகைக்குப் பின் சொன்ன சேதி இது தான்.

மீரா கர்ப்பமான காரணத்தினால் இந்தியாவுக்குப் போயிருக்கிறாள்.ஓராண்டு சென்று திரும்பி வரக் காத்திருந்தவளுக்கு , குழந்தையை வளர்ப்பது கஷ்டம் என்று காரணம் சொல்லியே மேலும் ஓராண்டு இழுத்தடித்தப்பின் ஞானப் பழம் ‘எனக்கு உன்னோடு வாழப் பிடிக்கவில்லை ’ என்று ஒற்றைக் காரணம் சொல்லி விவாகரத்து விண்ணப்பித்து விட்டானாம். 

மீராவின் அப்பா ஒரு மாதிரியாக இங்கு மகளை அனுப்பி வைத்து விட்டார்.இங்கு வந்த பின் தான் விவாகரத்து விவகாரமே தெரிய வந்ததாம். மீராவிற்கு கோர்ட் பத்திரங்களை வேறு முகவரியை போலியாக கொடுத்து அனுப்பியதாகக் காட்டியிருக்கிறான்.

நல்ல வேளை விவாகரத்து வழக்கு தேதிக்கு முன்னதாகவே மீரா வந்து சேர்ந்து விட்டாள். விவாகரத்து வழக்கு முடிந்த பின் இங்கு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக்  கல்யாணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்து. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து அழுது கொண்டிருக்கிறாள்.

ஒரு நிமிடம் ஞானப் பழம் என் கண் முன் தோன்றி ‘கழுத்தை நீட்டி என்னைக் கொல்’ என்று சொல்வதாகத் தோன்றியது.
மறு நிமிடம் ‘ வா என்னுடன் என்று ‘ மீராவை  சமூக சேவை மையத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன்.

மீரா அய்யோ அவுகளை கோட்டுக்கு இழுத்தால் … என்று இழுத்தாள்.
இப்படியே விட்டுத்தான் எல்லாப் பயலும் ஒண்ணு  இருக்கும் போது இன்னொன்ணை தேடுறான். என்று சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க உதவி செய்யும் அமைப்ப்புகளுக்கு அழைத்து சென்றேன்.

இப்போது பொய் முகவரி, கொடுத்தது, பொய்க் கையெழுத்து போட்டது, குழந்தை இருப்பதை மறைத்து, மத்தியஸ்த்த சான்றிதழ் வாங்காதது எனப் பல சமாசாரத்தில் ஞானப் பழம் மாட்டிகொண்டு முழிக்கிறது.
ஆகையினால் அம்மணிகளே , ஊருக்கு அனுப்பி வைக்க நினைக்கும் ஞானப் பழங்களிடம் கவனமாக இருங்கள்

No comments:

Post a Comment