Thursday, March 5, 2015

குலதெய்வ வழிபாடு

குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் வாழ்க்கைக்கு மிக அவசியம். குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமேகுல தெய்வம்எனப்படும். குல தெய்வ வழிபாடு என்பதுநன்றிசெலுத்துவதாகும். நிறைய பேருக்கு நன்றி என்பதே காலூன்றியவுடன் மறந்து போகும் ஒரு சமாச்சாரம்.

குல தெய்வம் என்பது பாட்டன் முப்பாடன் ஊரில் இருப்பதாகும், அதை இடம் பெயர்த்தல் ஆகாது. ஆனால் குல தெய்வம் படத்தை வைத்து வணங்கலாம்.

பல குடும்பங்கள் ஏதாவது சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுகின்றன. இதனால்  அடுத்து வரும் தலைமுறைகளுக்கு  தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதனால் குலதெய்வம் எது என்று தெரியாமல்அதை முறைப்படி வழிபடாதவர்கள், அதன் மகிமைகள் தெரியாதவர்கள் தான் நம்மில் அநேகம் பேர்.

ஒருவனுக்கு, ஜாதக பலம், முன்னோர் ஆசீர்வாதம் அல்லது வினைப்பயன் காரணமாக கெடுதிகள் நடக்கலாம்.அப்போது குலதெய்வம் வழிபாடு பயன் தரும்.

யாரோ கும்பிடுவதால் நாமும் கும்பிடுவோம் என்று குல தெய்வத்தைக் கும்பிடக் கூடாது. அல்லது கார், வீடு, வசதி மற்றும் வேண்டுதல் பலித்தலுக்காகவும் சம்பந்தமில்லாத குல தெய்வத்தைக் கும்பிடக் கூடாது.  

குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?


ஒருவேளை குல தெய்வம் என்ன என்று தெரியாதவர்கள் இருந்தால் அவர்கள்  என்ன செய்யலாம்? ஜாதகத்தில்  லக்கினத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒருவரின் குல தெய்வம் இருந்திருக்கும்.
உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் - சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.    ஐந்தில் - ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால்உங்கள் குல தெய்வத்தை உங்கள் மூதாதையரும்  மதித்து வணங்கவில்லை , நீங்களும் அலட்சியப்படுத்தி விட்டீர்கள்  என்று அர்த்தம்.

ஒருவரது தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் ஒருவருக்கு குல  தெய்வமாகும். தாய் வழி தெய்வம் குஅல் தெய்வமாகாது. இந்த வகையில்  மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கவனித்தால் உணரலாம். அதுதான்கோத்திரம்என்னும் ஒரு ரிஷியின் வழிவழி வரும் பாதை.

திருமணம் ஆகி வரும் பெண்கள் பிற கோத்திரத்தில் இருந்து வந்து  வேறு கோத்திரம் சார்ந்த கணவர்களை வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது வாழையடி வாழையாக  ”சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்கக் கூடாது எனப்து இதற்குத்தான்.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்ஒருவனுக்கு அருள் தரும் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். அதனால் திருப்பதிக்கு போகும் முன் குல தெய்வத்தை வணங்கி பின்னரே போக வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

பொதுவாக பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்களை வணங்கும்  நிலை. திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணத்தின் பின்  கணவனின் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.அதனால் ஒரு குடும்பத்தில் ஆண் வழி குல தெய்வமே குல தெய்வம்.

எந்த ஒரு வம்சத்திலுமே பதின்மூன்று  வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.


குலதெய்வத்தை அதன் கோவிலில் போய் தான் கும்பிட வேண்டும் ஏன் எனில் குல தெய்வம் என்பது சில ஊர்களுக்கு , சில குடும்பங்களின்  காவல் தெய்வமாக அமையப் பெற்றது. அப்படியான காவல் தெய்வத்தை அந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்வது  தவறு.மாற்று குல தெய்வங்களும் நிறுவப்படக் கூடாது.

No comments:

Post a Comment