திருமண வரம் தரும்
திருமணஞ்சேரி
சந்திரிகா சுப்ரமண்யன்
திருமண
ஆசை
கயிலையில் ஒரு முறை உமாதேவியாரின்
பூஜை நடந்து கொண்டிருந்தது. அன்னை
ஈசனை மீண்டுமொருமுறை மணக்கோலத்தில் இணைய விரும்பினாள். பெருங்
கருணைப் பெம்மானும் பிரமகற்பத்தில் உனை நான் மணப்பேன்
என்று வரமருளினார்.
ஈசனின்
சினம்
அம்மை அந்த நன்னாளை
நோக்கி காத்திருந்த போது காலங் கடந்து
கொண்டே வந்தது. அன்னை வருத்தமுற்று
ஈசனிடம் சற்று அலட்சியம் காட்டத்
தொடங்கினாள். அக்கினி வடிவினனான சர்வேசன்
அம்மையின் மேல் சினமுற்று அன்னை
பூவுலகில் பசுவாக வாழக் கட்டளையிட்டார்.
பசு வடிவு
பசு வடிவாகிய அம்மை
தன் செயலைக் கண்டு வருந்தி
சாப விமோசனத்துக்காக தவமிருந்தாள். சினந்தணிந்த முக்கண்ணனும் கலைமகள், திருமகள், இந்திரன் மனைவி உட்பட அனைத்து
தேவமாதரும் பசுவடிவில் அன்னையுடன் இணைந்து திருமால் பசுக்களை
மேய்ப்பவராக அவைகளைக் காத்துவர அனுக்கிரகம் வழங்கினார்.
அம்பிகை பசுவரிருந்து தன்
பாலால் அய்யனை நீராட்டி வந்தாள்.
தன் திருமேனியில் பாலின் குளிர்;ச்சி
தீண்டப் பெற்றதால் சிவனார் உள்ளம் கனிந்தார்.
பசுவின் குளம்புகள் தீண்டப் பெற்றதால் உளம்
மகிழ்ந்தார். தான் உமையை திருமணம்
புரிய நேரம் கனிந்ததைக் கண்டு
இறைவன் பரத மகரிஷி நடத்திய
வேள்விக் குண்டத்தில் உமை தோன்றியபோது அவளை
திருமணஞ்சோயில் மணம் புரிந்து கண்யான
சுந்தரராகக் காட்சியளித்தார் என்கிறது புராணம்.
ஊரெல்லாம்
திருநாள்
அம்பிகைக்கு பசுவாகும் சாபம் வழங்கியது தேரெழுந்தூர்
எனும் திருத்தலத்தில், அம்பிகை பசுவுருவிலும், திருமால்
மேய்ப்போனாகவும் உலவியது அசுக்காட்டில். குளம்புத்
தழும்பை சிவலிங்கத்தில் ஏற்படுத்தியது திருக்குளம்பத்தில், பசுவுக்கு முக்தியளித்தது திருவாவடுதுறையிலும், திருத்துருத்தியில் பரத மகரிஷி யாகத்தில்
பார்வதி தோன்றியதாகவும் அறியக் கிடக்கிறது. திருவேள்விக்குடியில்
திருமணத்திற்குரிய கங்கண தாரமும் மங்கள
ஸ்நானமும் செய்து முளைப்பாலிகையை குறுமுலைப்
பானையிலும், எதிர் கொள்பாடியில் இறைவனை
எதிர் கொண்டழைத்தும் திருமணஞ்சேரியில் கைத்தலம் பற்றிய திருநாளை நிகழ்த்தியதாகவும்
கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புப் பெற்ற
திருமணஞ்சேரி திருத்தலம் தஞ்சை மாவட்டம் மாயவரம்
அருகில் அமைந்துள்ளது.
சுவாமி பெயர் உத்வாகநாதர்.
அருள்வரமளிப்பவர் எனப் பொருள்படும். இவருடன்
உறைபவள் யாழினும் மென் மொழியான் எனப்பொருள்படும்
கோகிலாம்பாள்.
திருக்கல்யாண கோலத்தில் உற்சவ மூர்த்திகள் உறையும்
காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். எம்பெருமானின் இனிய மண வைபவத்திற்கு
சப்தசாகரங்களும் மாலையாக மாறி வந்ததாக
ஐதீகம்.
மன்மதன்
மன்மதன் முன்பு ஈசனின்
மூன்றாவது கண்ணால் எரிக்கப்பட்டதை அடுத்து
இத்தலத்தில் துதித்து அருள் பெற்றான் என்பது
புராணம்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில்
ஈசன் திருக்கல்யாண உற்சவம் மூன்று தினங்கள்
கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
திருமணக்கோலம்
மூல விக்கிரகமாகிய லிங்கத்திற்கு
முன்பாக பஞ்சலோகத்தில் கல்யாண சுந்தரமூர்த்தி கோகிலாம்பாளின்
கரம் பற்றி காட்சி தர
மூல அம்பாள் மண்டியிட்டு அமர்ந்து
திருமணப் பெண்ணாக காட்சி அளிக்கிறாள்.
நாணமும், பெண்மையும் மிளிரும் அழகுத் தோற்றம் அன்னையின்
தோற்றமாகும்.
இங்குறை ஈசனைப்பாடி மகிழ்ந்தவர்கள்
சம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஆவர்.
தோஷ நிவர்த்தி
மாப்பிள்ளை பெண்ணாக உறையும் இறைவனும்
அன்னையும் திருமணம் தடைப்பட்டு வருந்துவோரின் குறை தீர்த்து அருளுகின்றனர்.
குழந்தை இல்லாத ராகு தோஷ
நிவர்த்திகளும் கூட இங்கு நடைபெறுகின்றன.
பிரம்ம கல்யாணமூர்த்தியான இவரை
வணங்கும் கன்னிப் பெண்களுக்கு கல்யாணம்
கூடி வருவது கண்கூடு.
பிரார்த்தனை
அர்ச்சனை செய்ய விரும்புவோர் முதலில்
அர்ச்சனை தட்டுடன் சென்று அங்குள்ள வரசித்தி
விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர்
கல்யாணசுந்தரர் சமேத கோகிலாம்பாளுக்கு இரண்டு
அஷ்டோத்திர அர்ச்சனை செய்த பிறகு இரண்டு
மாலைகளை அம்பாளுக்கும் சுவாமிக்கும் சார்த்த வேண்டும். தீபாராதனையின்
பின் இம்மாலைகளில் கல்யாணசுந்தரர் அணிந்ததை பெண்ணின் கையில் கொடுத்து அணிந்து
கொள்ளச் செய்ய வேண்டும். அப்படி
அணியும் போது கெட்டி மேளம்
முழங்கப்படும். பிரசாதத்துடன் ஒரு எலுமிச்சம் பழம்,
ஒரு மஞ்சள் ஆகியவை வழங்கப்படும்.
வீட்டுக்கு வந்த பிறகு அப்பழத்தைப்
பிழிந்து வெறுமனே தண்ணீர் மட்டும்
சேர்த்து அருந்த வேண்டும். மஞ்சளை
தினமும் பூசிக் குளிக்க வேண்டும்.
மாலையை விளக்கேற்றி வைத்து வணங்க வேண்டும்.
கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்ட பின்
வீட்டில் செய்ய வேண்டியவற்றையும் கிரமமாக
செய்து வர ஒரு மண்டல
காலத்துக்குள் திருமணம் நடக்கிறது என்பது இங்குள்ளோர் உணர்ந்த
உண்மை.
பழமையும் பெருமையும் மிக்க இத்திருக்கோயில் சோழ
மன்னர்களின் திருப்பணியினாலும், கல்வெட்டுகளாலும் களைபெற்று நிற்கின்றது.
அர்ச்சனை
மணமாகாத ஆண்களும் இங்கு
வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அம்மையின்
மாலை இவர்களுக்குச் சூட்டப்படும்.
அர்ச்சனைக்கு மஞ்சள், குங்குமம், சூடம், ஊதுவத்p, சர்க்கரை, எண்ணெய்,
No comments:
Post a Comment