மொரீஷியசில் தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் மாநாடு
தாயகம்
கடந்து வாழும் தமிழர்களின் கலாச்சார
பாதுகாப்பு தொடர்பாக முதல் சர்வதேச மாநாடு
வரும் ஜூலை மாதம் 23-25 வரை
மொரீஷியசில் நடக்க உள்ளது..
சென்னை
ஆசியக் கல்வி மையமும், மொரீஷீயஸ்
மகாத்மா காந்தி மையமும் இணைந்து
நடத்தும் இந்த மா நாட்டிற்கு
மொரீஷீயஸ் அரசு ஆதரவு வழங்குகிறது.இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் பல தமிழ்
ஆர்வலர்கள், அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கு காரண கர்த்தாவான சென்னை
ஆசியக் கல்வி மையத்தின் நிறுவுனர்
டாக்டர் ஜோன் சாமுவேல் ‘ இந்த முயற்சி உலகெங்கிலும் வாழும்
தமிழர்களை ஒருங்கிணக்கும் ஒரு முயற்சி’ என்றார். மொரீசியசை சேர்ந்த யுனெஸ்கோ பிரதி
நிதியும் , ரெயின் போ அமைப்பின்
நிறுவனருமான பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன்
இந்த மாநாட்டின் பொறுப்பாளர்.சீனா,ஸ்கொட்லாந்து, அமெரிக்கா,
ஜப்பான், பிரான்ஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர்,
டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து
தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுரை
ஆற்றுகின்றனர்.
இலங்கையிலிருந்து
ராசையா மகேஸ்வரன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் தனித்துவமான கலாச்சார விழுமியங்கள் என்ற தலைப்பிலும்,இலங்கைத்
தமிழர்களின் மதம் மற்றும் கலாச்சாரம்
இங்கிலாந்தில் அளிக்கும் பங்கு பற்றியும் ஆய்வு
கட்டுரை வழங்குகின்றனர். தமிழ் ஆஸ்திரேலியனின் ஆசிரியரும்,
வழக்கறிஞரும்
, ஊடகத்
துறையில் கலாநிதி பட்டம் பெற்றவருமான
சந்திரிகா சுப்ரண்யன் ’தாயகம் கடந்த தமிழ்
ஊடகம்’ என்ற
தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கிறார்.
No comments:
Post a Comment