அகதிகள்
ஆஸ்திரேலியாவில் தொடரும் துயரம்
ஆஸ்திரேலியா
அகதிக் கொள்கைகள் இறுக்கமடைந்து வரும் வரும் வேளையில், அகதிகள் குறித்து சரியான
மதிப்பீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2012 -2013
க்கான அகதி வருகை 5400 என மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
அகதி வருகை தாறு மாறாக எகிறியதை தொடர்ந்து இந்த மதிப்பீடு மறு பரிசீலனை செய்யப்பட்டு
12,000 என பெப்ருவரி 2012 இல் மீளறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் இந்த
நம்பிக்கையை தகர்ப்பதாக ஜூன் மாத அகதி
வருகை 22,500 ஐ எட்டியது.தொடர்ந்து 2013-2014 க்கான மதிப்பீடு 13,200 என்
கணக்கிடப்பட்டது. 2012 ஆகஸ்ட் 13 இன் ‘சலுகை
மறுப்பு’ கொள்கையின் பின் – அதாவது அகதி
நிர்ணயம் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே என்று
தீர்மானிக்கப் பட்டபின், 19,760 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்டதை விட அதிகமாகும். இந்த
எண்கள் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்படி
புள்ளிவிபரங்களைத் தந்த குடிவரவுத் துறை செயலர் மார்ட்டின் பவல்ஸ் இந்த ஆண்டு ஜூன் 30க்குள் 25000 அகதிகள் வருவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.இதுவரை
அரசு 3.2 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது என்பது பின்புலத் தகவல்.
ஆஸ்திரேலியாவின்
அகதிக்கொள்கைகள் அரசியல், கட்சி மாற்றங்கள் நிகழும் போது மாறி
வந்திருக்கின்றன.ஜுலியாவின் அரசும் ஹார்வர்டின் அரசும் அகதிக் கொள்கைகளை மாறி மாறி
விமர்சனம் செய்தாலும் கூட இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படை அணுகு முறை ஒன்றாகவே
இருந்து வந்திருக்கிறது என்பதே உண்மை.எந்த அரசும் அகதிக் காப்பகமாக ஆஸ்திரேலியா
இருப்பதை விட மனித உரிமைக் காவலனாக உலக அளவில் இனம் கண்டுக் கொள்ளப்படுவதையும் ,
அகதி மாநாட்டின் கையொப்பதாரியாக தன் கடமையை செய்ய தவறவில்லை என்ற நிரூபணம் தவிர
வேறு எந்தவித நோக்கத்தையும் இனம் கண்டு கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.பழைய
கள்ளை புதிய மொந்தையில் தருவதைப் போலவே ஒரே அகதி பொதியை வேறு வேறு
கட்டமைப்புக்குள் அடக்கி அகதிகளைக் ‘கவனித்த’ன
இந்தக் கட்சிகள். பல அகதி நலக் குழுக்களும், அமைப்புகளும் கொடுத்து வரும் குரல்கள்
பலனற்றுப் போயின.அகதிப் பிரச்சனை பூதாகரமாக ஆஸ்திரேலியாவில் உருவாகிக் கொண்டுள்ளது என்பது கண்கூடாகும்.
அகதிகள்
அவதரிக்கும் நாடுகளாக் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டுள்ள ஆஃப்கான், சூடான், இலங்கை
மக்களுக்கு கிட்டும் வருகை விசாக்கள் கூட
அகதி அச்சத்தால் நியாயமான காரணங்களுக்கு அப்பாற்பட்டு நிராகரிக்கப் பட்டு
வருகின்றன.உதாரணமாக பதூர் , பரகத் என்ற
இரு ஆஃப்கானிய இளைஞர்கள் பற்றிய செய்தியை பார்ப்போம். பதூர், துணிச்சலான புகைப்பட
பத்திரியாளன். காபூல் அமெரிக்க தூதரகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை
பார்த்தவர். தந்து புகைப் படங்களை கண்காட்சியாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா விசா
மறுத்ததினால் வர முடியாமல் போனவர்.தொடர்ந்து இவரது பணியில் ஒரு பத்திரியாளராக விமர்சனங்கள் வெளிபடுத்தியபோது அச்சுறுத்தல்களே பரிசாக அமைந்தன.
No comments:
Post a Comment