இந்தியாவின் விடுதலை இன்னும் கிட்டவில்லயா?
கற்புக்கு கால காலமாக வரைவிலக்கணங்களையும்
உதாரணங்களையும் , புராணங்களையும் பங்களித்து வரும் , வந்த நாடு இந்தியா.அண்மையில், கிராமத்து தலைமைத்துவ உத்தரவின்
பெயரில் ஒரு பெண்ணை குழுவாக கற்பழித்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது.இதற்கு
தண்டனையாக
இந்த மாதம்
ஐம்பது வயது வெளி நாட்டு பெண்ணை கற்பழித்த பெருமை இந்திய குடி மக்கள் குழுவினருக்கு கிட்டியுள்ளது. அதுவும் தலை நகர் புடில்லியில். அத்ற்கு முன் சுவிஸ் பென்,
பின் இங்கிலாந்தை சேர்ந்த பெண் அதன் பின் அமெரிக்க பெண்.இவற்றைத் தொடர்ந்து
பல நாடுகள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு
எதிரான வன்முறைகளில் பாலியல் வன்முறைகளே உச்சம் பெற்றிறருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள் கற்பழிப்புக்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக எகிறியுள்ளது. இந்தியாவில்
ஒவ்வோரு 21 நிமிடமும் ஒரு பெண் கற்பழிக்கப் படுவதாக 2012 ஆண்டு புள்ளி
விபரம் தெரிவிக்கின்றது.
இதில் என்ன வேடிக்கை என்றால்
கற்பழிப்புகளை வித விதமாகச் செய்ய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது கற்பனை
அல்ல, ஓடும் பஸ்ஸில் மாணவியை கற்பழிப்பது, ஐந்து வயது மகளை கற்பழித்த தந்தை, வேறு சாதியில்
மணமுடித்த பெண்ணை குழு கற்பழிப்புக்கு உத்தரவிட்ட கிராமத்து தலைமை, மருமகளை கற்பழித்த
மாமனார், பணிப்பெண்ணை கற்பழித்த வீட்டுத் தலைவர் இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படியானால் மகாத்மா காந்தி
சொன்னதன் படி ’எப்போது நள்ளிரவில் எவ்வித அச்சமும் இல்லாமல் ஒரு பெண் நடமாட முடிகிறதோ அப்போதுதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற அர்த்ததின் அடிப்படையில் இந்தியாவின் விடுதலை இன்னும்
கிட்டவில்லையா?
No comments:
Post a Comment