Sunday, March 2, 2014

தலையங்கம் 2014 ஜனவரி

அண்மையில் பார்த்த ஆங்கிலத் திரைப்படம் தி கோக்கா கோலா கிட்( The Coco Cola Kid ).
ஆஸ்திரேலிய சினிமா. கோக்கா கோலா நிறுவனம் தனது இலக்கினை எட்ட ஒரு இளம் விற்பனை முகாமைத்துவ நிபுணரை இங்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோக்கா கோலா விற்பனையை உள்ளூர் குளிர் பானம் தடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்து அந்த இளைஞர் அந்த ஊருக்கு வருகிறார்.

அந்த உள்ளூர் குளிர் பான தொழிற்சாலை  நிறுவுனரை சந்தித்து சாம, தான, பேத தண்டங்களைப் பிரயோகித்து பேரம் பேசுகிறார். உள்ளூர் குளிர் பான தொழிற்சாலையை மூடி விட்டு கோக்கா கோலா நிறுவன விற்பனை தொடர் வியாபார உரிமையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்துகிறார்.முடிவில் அந்த உள்ளூர் குளிர் பான தொழிற்சாலை  நிறுவனர் தனது தொழிற்சாலையை குண்டு வைத்து தகர்த்து விடுகிறார் என்பதோடு கதை முடிவடைகிறது.

.ஒரு பலசாலி தனது ரத கஜ துராதி படைகளையும்  சாம தான பேத தண்ட முறைகளையும் பயன் படுத்தி உள்ளூரில் மிகுந்த செல்வாக்குடைய ஒரு நிறுவனத்தை மூடுவதினை விட ஒரு படி மேலே போய் சுய ஆத்ம தர்ப்பணம் என்ற நிலைக்கு தள்ளுவது எந்த விதத்தில் தர்மம்?

இன்றைக்கு உலக அரசியல் இந்த நிலையில் தான் உள்ளது. குறிப்பாக எனக்கு இது இலங்கை  நிலவரத்தினை நினைவூட்டியது.கோக்கா கோலா யார் , உள்ளூர் குளிர் பான நிறுவுனர் எவர் என்பதை சிந்தியுங்கள். நான் சொல்வதின் உண்மை புலப்படும்.


No comments:

Post a Comment