Monday, August 3, 2015

Late Dr Abdul Kalam - a youth Icon


Late Dr Abdul Kalam  - a youth Icon
 

Today we are here to celebrate the meaningful life of late Dr AJP Abdul Kalam ,the 11th President of India .

A multifaceted personality, a man of technology, a scientist to be proud of,   a teacher and a leader will be deeply cherished by a grateful nation.An author who inspired millions of young hearts,  who believed Swami Vivekananda’s ,  famous quote,

 “ Arise, Awake, and Achieve.”

He believed and said, “I am one of the citizens of the billion; only the vision will ignite the billion souls.”

So he ignited and inspired the youth, where he took teaching seriously.

 

I will keep the lamp of knowledge burning to achieve the vision - Developed India, which he did until his last breath.

·         He came from a financially poor background

·         He was never the first ranker at school but  he was hard working towards his dreams

·         His financial condition never stopped him from dreaming  and  studying

 

As any other youth he also had unfulfilled dreams. He wanted to become a pilot. But placed ninth when only eight positions were available at the Indian Air Force 

 

He left a message for the youth by living a life that will be admired by any young person.

 

Late Dr. Kalam had said one of modern India's greatest strengths was its youth.

 

"No other democratic nation has world’s largest youth population. The ignited mind of the youth is the most powerful resource -- on the earth, above the earth, under the earth -- and we have that," he said.

 

In the last 15 years, he had interacted with more than 18 million youngsters either face-to-face or over the internet.

Teaching, inspiring and igniting young minds were his passion.

He died while doing such a noble mission.

"late Dr Kalam never 'talked over' with the youth, he 'talked with' them," "He went down to the level understandable by the person he was speaking to, whether school children or IIM students. That's why young people connected to him and loved him so much."

My note will be incomplete if I do not quote Dr Kalams’ poem for the youth,  

 

Oath for the Youth

 

I will have a goal and work hard to achieve that goal.

 

I realize that small aim is a crime.

 

I will work with integrity and succeed with integrity.

 

I will be a good member of my family, a good member of the society, a good member of the nation and a good member of the world.

 

I will always try to save or better someone’s life, without any discrimination of caste, creed, language, religion or state. Wherever I am, a thought will always come to my mind. That is “What can I give?”

 

I will always protect and enhance the dignity of every human life without any bias.

 

I will always remember the importance of time. My motto will be “Let not my days, be spent in vain”.

 

I will always work for clean home, clean planet Earth and clean energy.

 

As a youth of my nation, I will work and work with courage to achieve success in all my tasks and enjoy the success of others.

 

I am as young as my faith and as old as my doubt. Hence, I will light up then, the lamp of faith in my heart.

 

My National Flag flies in my heart and I will bring glory to my nation.

 

I will fly

“I am born with potential.

I am born with goodness and trust.

I am born with ideas and dreams.

I am born with greatness.

I am born with confidence.

I am born with wings.

 

So, I am not meant for crawling,

I have wings, I will fly

I will fly and fly”

 

This is the belief that late Dr Kalam sew in the young minds of the nation.

 

He gave wings to them.

He made them to dream.

He wanted them to fly high.

Speech at Hills sports Centre on 02.08.2015
 

Thursday, March 5, 2015

குலதெய்வ வழிபாடு

குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் வாழ்க்கைக்கு மிக அவசியம். குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமேகுல தெய்வம்எனப்படும். குல தெய்வ வழிபாடு என்பதுநன்றிசெலுத்துவதாகும். நிறைய பேருக்கு நன்றி என்பதே காலூன்றியவுடன் மறந்து போகும் ஒரு சமாச்சாரம்.

குல தெய்வம் என்பது பாட்டன் முப்பாடன் ஊரில் இருப்பதாகும், அதை இடம் பெயர்த்தல் ஆகாது. ஆனால் குல தெய்வம் படத்தை வைத்து வணங்கலாம்.

பல குடும்பங்கள் ஏதாவது சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுகின்றன. இதனால்  அடுத்து வரும் தலைமுறைகளுக்கு  தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதனால் குலதெய்வம் எது என்று தெரியாமல்அதை முறைப்படி வழிபடாதவர்கள், அதன் மகிமைகள் தெரியாதவர்கள் தான் நம்மில் அநேகம் பேர்.

ஒருவனுக்கு, ஜாதக பலம், முன்னோர் ஆசீர்வாதம் அல்லது வினைப்பயன் காரணமாக கெடுதிகள் நடக்கலாம்.அப்போது குலதெய்வம் வழிபாடு பயன் தரும்.

யாரோ கும்பிடுவதால் நாமும் கும்பிடுவோம் என்று குல தெய்வத்தைக் கும்பிடக் கூடாது. அல்லது கார், வீடு, வசதி மற்றும் வேண்டுதல் பலித்தலுக்காகவும் சம்பந்தமில்லாத குல தெய்வத்தைக் கும்பிடக் கூடாது.  

குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?


ஒருவேளை குல தெய்வம் என்ன என்று தெரியாதவர்கள் இருந்தால் அவர்கள்  என்ன செய்யலாம்? ஜாதகத்தில்  லக்கினத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒருவரின் குல தெய்வம் இருந்திருக்கும்.
உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் - சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.    ஐந்தில் - ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால்உங்கள் குல தெய்வத்தை உங்கள் மூதாதையரும்  மதித்து வணங்கவில்லை , நீங்களும் அலட்சியப்படுத்தி விட்டீர்கள்  என்று அர்த்தம்.

ஒருவரது தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் ஒருவருக்கு குல  தெய்வமாகும். தாய் வழி தெய்வம் குஅல் தெய்வமாகாது. இந்த வகையில்  மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கவனித்தால் உணரலாம். அதுதான்கோத்திரம்என்னும் ஒரு ரிஷியின் வழிவழி வரும் பாதை.

திருமணம் ஆகி வரும் பெண்கள் பிற கோத்திரத்தில் இருந்து வந்து  வேறு கோத்திரம் சார்ந்த கணவர்களை வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது வாழையடி வாழையாக  ”சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்கக் கூடாது எனப்து இதற்குத்தான்.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்ஒருவனுக்கு அருள் தரும் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். அதனால் திருப்பதிக்கு போகும் முன் குல தெய்வத்தை வணங்கி பின்னரே போக வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

பொதுவாக பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்களை வணங்கும்  நிலை. திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணத்தின் பின்  கணவனின் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.அதனால் ஒரு குடும்பத்தில் ஆண் வழி குல தெய்வமே குல தெய்வம்.

எந்த ஒரு வம்சத்திலுமே பதின்மூன்று  வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.


குலதெய்வத்தை அதன் கோவிலில் போய் தான் கும்பிட வேண்டும் ஏன் எனில் குல தெய்வம் என்பது சில ஊர்களுக்கு , சில குடும்பங்களின்  காவல் தெய்வமாக அமையப் பெற்றது. அப்படியான காவல் தெய்வத்தை அந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்வது  தவறு.மாற்று குல தெய்வங்களும் நிறுவப்படக் கூடாது.

Friday, February 13, 2015

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அளித்த கட்டுரையின் காட்சி வில்லைகள்

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அளித்த கட்டுரை

புலம் பெயந்த நாடுகளில்
மரபு காப்பதில் தமிழர்கள் எதிர் நோக்கும் நடை முறைச்சிக்கல்கள்

 கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் நிவாசினி சுப்ரமண்யன்



முன்னுரை
மொழியும் , மற்றும் கலாச்சாரமும்,இன அடையாளமும் ஒத்த மக்கள் உலகின் பாகங்களில் பரந்து வாழும் போது ’’டயஸ்போரா என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். 'Diaspora ' என்ற ஆங்கில வார்த்தை, பாபிலோனியப் படையெடுப்பினால் ஜெருசலேத்திலிருந்து வெளியேறி, இன்று இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களைக் குறிக்கப் பயன்படும் சொல். இன்று உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய ஐம்பது நாடுகளில் எழுபது மில்லியன் தமிழர்கள் புலம் பெயந்து கால்பதித்து இருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் மொழி, பண்பாடு, பாரம்பரியம் கலாச்சார விழுமியங்களை பேணுவதற்கு அவர்கள் தவறுவதில்லை. தொழில், கல்வி, வாணிபம், அடிமைத் தொழில் மற்றும் உள் நாட்டு போர் போன்ற காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்து உலகின் பல்வேறு பாகங்களிற்கும் தமிழர்கள் சென்றுள்ளனர்.

இப்படி உலக சக்தியாக விளங்கும் தமிழினம் தனது பாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கைப் பிடித்துத்தர விழைகிறது. அப்படி செய்வதனால் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வாழையடி வாழையாக தழைக்கும் என்றும் நம்புகின்றது.

ஆஸ்திரேலிய தமிழர் கலாச்சாரம்  ஓர் அறிமுகம்
உலகில் வாழும் தமிழர்களில் பிரிட்டனில் 300,000 பேரும், அமெரிக்காவில் 300,000 பேருக்கு அதிகமாகவும், கனடாவில் 300,000 பேருக்கு அதிகமாகவும்,ஆஸ்திரேலியாவில்  ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேரும்  வாழ்கின்றனர்.

ஆஸ்திரேலிய  நாட்டிற்கு வந்த புலம் பெயர்ந்த தமிழர்களில் அநேகமானோர் இலங்கைத் தமிழராவர்.மற்றையவர்கள் இந்தியா, மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களால் தமிழர்களது மொழி, கலை, பண்பாட்டு மரபுகள் ஆகியவை பாதுகாத்து வரப்படுகின்றன. பல்லின , பல் கலாச்சார சூழலில் வாழும் ஆஸ்திரேலியத் தமிழர்கள், வேற்றுக் கலாச்சாரத்தில் தமிழ் கலாச்சாரத்தைப் பேணுவது மிகச் சிக்கலானதும் சவால் மிக்கதும் ஆகும்.

ஆஸ்திரேலியாவின் ஆறு மாநிலங்களில் வாழும் தமிழர்களில் பெருந்தொகையானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும், அடுத்து விக்டோரியா மாநிலத்திலும், மூன்றாவதாக குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் வசிக்கின்றனர். தற்போது மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்த மாநிலங்களில் எல்லாம் கலை, பண்பாடு வளர்க்கும் பணிகளில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை  பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு பேணுதலில் தமிழர்களின் பங்களிப்பு
இருபதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் மற்றும் கிறித்துவ, கத்தோலிக்கதேவாலயங்களில் வழிபாடு தமிழில் நடத்தப்படுகின்றன.

வார இறுதியில் தமிழ் கற்பிக்கும் சிறப்பு தமிழ் பாடசாலைகள் இருபது இந்திய இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இங்கு தமிழ் போட்டிகள், தமிழ் விழாக்கள், தமிழ் கலாச்சார நிகழ்வுகள், ஆகியவை ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. மேல் நிலைப்பள்ளி  தேர்வில் தமிழ் ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

ஏறத்தாழ  அரசியல் சார்பற்ற ஐம்பது தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன.கடந்த சில ஆண்டுகளாக பொங்கல், சித்திரைத் திருவிழா , ஆகிய விழாக்கள் ப்ரிஸ்பேன், சிட்னி, மெல்பேர்ண் ஆகிய பெரு நகரங்களில் நடத்தப்படுகின்றன.

சிட்னி, மெல்பேர்ண் நகர்களின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில்   வணிக செயல்பாடுகள்   மேலோங்கியுள்ளன. உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள், தங்க நகைதுணிக் கடைகள், எனத் தமிழர் வாழ்வியலுக்குத் தேவையான கலாச்சாரம் சார்ந்த  பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும்  தமிழ் நிறுவனங்கள் உள்ளன.

ஊடகங்கள் வளர்க்கும் தமிழர் கலாச்சாரம்
தமிழர் கலாச்சாரம்  தொடர்பான நிகழ்வுகளை பதிவு செய்ய 1995 முதலே பல ஊடகங்கள் இயங்கி  வந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கழகம், தமிழ் முழக்கம் 1992 , எஸ் பி எஸ்  சேவை , இன்பத்தமிழ், இப்படி பல வானொலி அமைப்புக்களும் இணைய வானொலிகளும் இயங்குகின்றன.

தமிழ் அவுஸ்திரேலியன், மெல்லினம், தென்றல், தமிழ் ஓசை ஆகியவை அச்சில் வரும் மாத இதழ்களாகும். காசு கொடுத்து  வாங்க  முன்வராத  படியால் இலவசமாகவே கிடைக்கிறது. தயாரிப்பு  செலவுக்கு தமிழ் வர்த்தகர்க விளம்பர ஆதரவாளர்களை நம்பியே அச்சு ஊடகம் செயல்பட வேண்டி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தமிழ் தொலைகாட்சிகளில் முதலில் வந்ததுசிகரம். 2007 இல்தரிசனம்இதனுடன் இணைந்து கொண்டது. பின் 2008 இல்குளோபல் தமிழ் விஷன்என்று புதிய அவதாரம் எடுத்தது. இவ்வூடகங்கள்தமிழர் கலாச்சாரம் சார்ந்த பல நிகழ்வுகளை நடத்துகின்றன. அச்சு ஊடகங்களைப் போல இல்லாது இளையோருக்கும் கவர்ச்சிகரமாக உள்ளது.
திரைப்படங்கள் வரவேற்பு பெற்றிருக்கின்றன. உள்ளூர் தயாரிப்புக்களும் உள்ளன.

தமிழ் அமைப்புக்களின்  முக்கிய நோக்கமாக தமிழ் கலை, கலாச்சார வடிவங்களினையும் கற்கவும், பேணவும் , செயல் வடிவம் கொடுப்பதும் உள்ளது.ஆனால் இப்படி கலை , பண்பாடு  மற்றும் கலாச்சாரம் பேணுதல் தொடர்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழினம் சந்திக்கும் நடை முறை சிக்கல்கள் பல.

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு பேணுதலில் தமிழர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்
1.            நடைமுறைத் தமிழ் பயிற்றல்
2.            வாரம் ஒருமுறையே தமிழ், கலை பயிற்சிகள் நடப்பதனால் கால இடைவெளியும், அதிக நேரம் (4 மணித்தியாலம் ) நடப்பதனால் இளையோர் கட்டாயப்படுத்தப்படுவதாக ஓர் உணர்வை ஏற்படுத்தி அவர்கள் ஆர்வம் குறைகிறது.
3.            இளையோர் அன்றாட வாழ்வில் அதிக அளவில் ஆங்கிலப் பேச்சில் ஈடுபடுவதால் தமிழ் சார்ந்து கலைகளைக் கற்றலிலும், கற்பித்தலிலும் சிரமம் ஏற்படுகின்றது.
4.            மொழிப்புரிந்துணர்வு குறையும் போது பொருள் உணர்ந்து கற்றல், வெளிப்படுத்தல் சிக்கலாகிறது.
5.            பலருக்கு ஆர்வம் இல்லாமல் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவே பயிற்சிக்கு வருகின்றனர்.
6.            இரு/பல் கலாச்சார சம நிலைப் பேணலில் தனி நபர் சூழ்நிலை சார்ந்து, வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கத் தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வருதல்.
7.            பணி, வாழும் சூழ்நிலைகள் கலாச்சார பேணலுக்கு சாதகமாக இல்லாமை.
8.            இனவாதம் , இனம் சார்ந்த கொடுமைகளை சந்திக்கும் வேளையில் கலாச்சார அடையாளங்களைப் பேணமுடியாமை.
9.            தமிழ் கலை கலாச்சாரம் வளர்க்கபின்பற்றக்கூடிய சாதகமான பின் புலம் இல்லாத இடங்களில் இருத்தல்.
10.          இளையோர் தாமாகவே தமது கலாச்சாரம் விட்டு விலகிச் செல்லுதல்.
11.          வேறு கலாச்சார பின்னணி கொண்டோருடன் திருமணம் மற்றும்  உறவில் ஈடுபடுவதால் வேறு/ கலப்பு கலாச்சாரத்தை தழுவுதல்.
12.          தமிழை சரளமாகப் பேசுவதற்கும் ,வாசிப்பதற்கும் தடுமாறுவதால் அச்சு ஊடகம் இளையோரைக் கவர்வதில்லை
13.          வேறு கலாச்சாரம் சார்ந்த கலைகளில் ஈடுபாடு வளர்வது.
14.          புதிய கலாச்சாரம் சார்ந்து  இளையோரின் அணுகுமுறைகள் தமது கலாச்சார விழுமியங்களை நிராகரிப்பது.
15.          தமது கலாச்சாரம் தொடர்பான கட்டாயப்படுத்தலால் வரும் வெறுப்பு
16.          தமது கலாச்சாரம் தொடர்பான புரிந்துணர்வு இன்மை.
17.          தமது கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் ஆர்வம் குறைதல்அதிகமாகத் திணிக்கப்படுவதால் அல்லது அல்லது  அறிமுகமின்மை காரணமாக.
18.          பெற்றோர் கலாச்சார விழுமியங்களை பின்பற்றாத காரணம்
19.          தொலைகாட்சி கலாச்சார பரப்புதலுக்கு உதவியாக இருந்தாலும் , இளையோர் தமிழ் பேசுவதில் உள்ள தடுமாற்றம் தடையாக இருக்கிறது.இது வானொலிக்கும் பொருந்தும்.
20.          இளையோர் தமிழை சரளமாக படிக்க எழுத  முடியாத காரணத்தினால் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும்.(படித்தல்- பங்களித்தல்)
21.          தமிழ் திரைப்படங்கள் , இப்போது வரவேற்பில் இருந்தாலும் அடுத்த தலைமுறையினரைக் கவர்வதில்லை.
22.          சமூக வலைத் தளங்கள் , இணைய தளங்கள் , வலைப்பூக்கள் மூலம் தமிழ் செயல்பாடுகள்தமிழில் தொடர்பாட எழுத்து மொழி அவசியம்.
23.          நூல்கள் வெளிட்யிடப்படுகின்றன. ஆனால் அடுத்த தலைமுறையினர் இலக்கு அல்ல.

பரிந்துரைகள்
1.            மொழியின் பயன்பாடு தொடர்பான சரியான புரிந்துணர்வை கற்பித்தலில் ஈடுபடுத்த வேண்டும்.
2.            தமிழில் பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
3.            எளிய, நடைமுறைத்தமிழ்பயன் பாட்டுத்தமிழ் தமிழ் கற்பித்தலில்  நோக்கமாக இருக்கவேண்டும்.தொன்மையை பாதுகாக்க தேவைதான். ஆனால், முதலில் அடிப்படையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
4.            கலாச்சாரம், மொழி தொடர்பாக  பெற்றோருக்கு  வேறுபட்ட கருத்துக்கள் இருந்தால் விலக்கி அவற்றின்  முக்கியத்துவத்தை உணர்ந்து இளையவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
5.            கடும் மொழியில் இல்லாமல் இலகு தமிழில் உள்ளடக்கம் உள்ள அச்சு, இணைய படைப்புக்கள் தேவை.
6.            இளையவர்களுக்கு ஆர்வமூட்டும் பொருளில்  ஊடக, இணைய படைப்புக்கள் தேவை.
7.            இளையோருக்கு ஆர்வமூட்டுவதாக தமிழ் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
8.            மொழி வித்தியாசம் குறைக்கப்படவேண்டும்இலங்கைஇந்திய தமிழ் வேறுபாடு.
9.            தமிழ் கல்வி நிலையங்கள்  கற்றுத் தருவதை வீட்டில் பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கித்தர மொழி வளம் செறிந்த இல்லங்கள் தேவை.
10.          தமிழ் நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
11.          இணையம் சார்ந்த பங்களிப்பில் இளையோர் உக்குவிக்கப்படவேண்டும். வயது சார்ந்த விடயங்கள் சேர்க்கப்படலாம்.அதற்கு நகைச்சுவை துணுக்குகள், சிறிய கவிதைகள் ஆரம்பமாக இருக்கலாம்.
12.          மொழி, கலாச்சாரத்தின்  தொன்மையை மட்டுமே பேசுவதைவிட்டு எதிர்காலத்தில் நடைமுறையில் அவற்றை பயன்படுத்தி பராமரிக்கத்தக்க வகையில் தமிழ் ஊட்டப்படவேண்டும்.
மேற்படி முயற்சிகள் தமிழையும் கலாச்சாரத்தையும் கற்றல், பயன்படுத்தல் , கற்பித்தல் மற்றும் பராமரித்தலுக்கு வழிவகுக்கும்.
கலாச்சாரமும் மொழியும் பிணைந்தே செயல்படுவதால் மொழி சார்ந்த தளத்திலேயே கலாச்சாரமும் பயணிக்கின்றது. பிறமொழி மற்றும் கலாச்சாரத்தைத் தாண்டி தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பேணுவது மிகச் சிக்கலான ஒன்றே. எளிய நடைமுறையுடன் ஒன்றிய மொழிப்பயிற்சியும், வாழ்வுடன் தொடர்புறும் கலாச்சார அனுபவமுமே புலம் பெயந்த நாடுகளில் தமிழர்களின் கலை , பண்பாடு  மற்றும் கலாச்சாரம்  பேணுவதில் எதிர் நோக்கும் நடை முறை சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

பின்குறிப்பு: இக்கட்டுரையில்சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஒரு தமிழ் கல்விக்கூட ஆசிரியர், இளைய தலைமுறையில் இருந்து தமிழ் வளர்க்க உதவிய ஒருவர், மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டவை.